நாடாளுமன்றத்தின்செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் ஒருபோதும் உதவ போவதில்லையென இலங்கை சுதந்திரக்கட்சியின்பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்தகூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு சிறந்த அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தின்செயற்பாடுகளுக்கு ஒருபோதும் உதவுவதற்கு முன்வரப்போவதில்லை.
இதனால்முழுமையான ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்குஜனாதிபதிக்கான அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மக்கள்தான் உதவ வேண்டும்.
எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்2/3 பெரும்பான்மை அவர் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதித் தேர்தலை போன்று முழு ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்