மருதானை ரயில் நிலையம் அருகே இன்று காலை பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம சென்ற ரயிலே தடம்புரண்டதாக ரயில்வே கண்காணிப்பாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
இதன் காரணமாக அனைத்து ரயில்சேவைகளும் தாமதமாகும் என்று அவர் தெரிவித்தார்.
ரயில் பாதை பணிகள் செப்பனிடும் செயற்பாடு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.