மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வி கற்று வந்த என் மகளுக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது என யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாய் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவி திருமதி ரோஷினி காஞ்சனா (28) என்பவரின் உடல் நேற்று (24) பேருவளையில் உள்ள பதனாகொடவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
கிளிநொச்சி பரந்தன் இராணுவ முகாமின் வைத்திய பிரிவில் இணைந்து பணியாற்றிய கணவரான பிரதீப் என்பவரால் யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டார்.
உயிரிழந்தவர் தனது ஆரம்ப கல்வியை பதானகொட வித்யாலயாத்திலும் பின்னர் எஸ் சேனநாயக்க கல்லூரி மற்றும் மத்துகம மத்திய கல்லூரியில் தனது அடிப்படைக் கல்வியை முடித்த பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நுழைந்து இறுதி ஆண்டு படித்து வந்தார்.
ரோஷினியின் தாயாரான திருமதி பிரேமலானி ( 57 வயது )அழுதபடி தெரிவித்தவை வருமாறு,
“என் மூத்த மகள் இறந்துவிட்டாள். என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது? நான் மதியம் 1.30 மணிக்கு என் அம்மாவை அழைத்து, சாப்பிட சொன்னேன். மகளிடம் இருந்து அழைப்பு வராததால் நான் அழைப்பு எடுத்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து பொலிசார் பேசினர். இந்த இலக்கத்துக்கு சொந்தமான பெண் கழுத்தை வெட்டியதாக பொலிசார் தெரிவித்தனர். என் மகள் கழுத்தை வெட்டுவார் என்று யார் நினைத்திருப்பார்கள்?
அடுத்த ஏழு மாதங்களில் மருத்துவராக ஆகவிருந்த முதல் பெண் என் மூத்த மகள். உலகிற்கு விலைமதிப்பற்ற வளங்களை இழந்துவிட்டோம், ”என்றார் ரோஷினியின் தாய்.
இறந்த மருத்துவ மாணவரின் தந்தை தெரிவிக்கையில்,
என் மூத்த மகள் இறந்துவிட்டாள். 31.12.2016 அன்று திருமணம் செய்து குடும்ப பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இதைச் செய்ய நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் தனது சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்களை மிகவும் நேசிக்கிறார்..
நான் களுத்துறை பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். குழந்தையை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அவர் தைரியமாக மருத்துவக் கல்லூரிக்கு நுழைந்தார். மருத்துவர் கனவுகள் அனைத்தும் மங்கிவிட்டன.
எனது மகள் மிகவும் நல்லவர். மிகவும் கஷ்டப்பட்டே எனது மகளை வளர்த்தேன். அவர் ஒரு போதும் தவறான வழியில் போகக்கூடியவர் அல்ல. எங்கள் விரும்பமின்றி அவர் ஒன்றையும் செய்து கொள்ளவில்லை. திருமணத்தின் போது மாத்திரமே விடாப்பிடியாக இராணுவ சிப்பாய் பிரதீப்பை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். இறுதியில் அதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.
பிரதீப் அதே பிரதேசத்தை சேர்ந்தவராகும். பாலர் பாடசாலை முதல் நண்பர்களாக பழகியவர். எனினும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னரே காதல் தொடர்பு ஏற்பட்டது.
இரண்டு முறை விஞ்ஞான பிரிவில் உயர்தரப்பரீட்சைக்கு முகம் கொடுத்த மகள் வைத்தியராக வேண்டும் என் ஒரே இலக்கில் இருந்தார். அவ்வளவு தூரம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற போராடினோம். பல்கலைக்கழகம் சென்ற பின்னரே இராணுவ சிப்பாய் மீண்டும் பழக்கம் ஏற்படுத்தி அது காதலாக மாறியது.
தெற்கில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் உடனடியாக அங்குள்ளவர்களுடன் நெருங்கி பழகிவிட மாட்டார்கள். இந்த நிலையில் சிறு வயது நண்பனின் பழக்கம் கிடைத்தால் நெருக்கம் ஏற்பட்டு விடும்.
அதற்கமைய இருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. அந்த காலப்பகுதியில் பிரதீப் யாழ்ப்பாணம், பரந்தன் இராணுவ முகாமின் வைத்திய படையில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமணத்தின் பின்னர் இருவரும் பிரதீப்பின் தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.
திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னரே பிரச்சினைகள் ஆரம்பித்தது. ஒரு முறை வாயில் இருந்து இரத்தம் வரும் அளவிற்கு பிரதிப் மகளை தாக்கியிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தது.
அதன் பின்னர் மகள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஏன் என வினவிய போது, எங்களுடன் பேசக்கூடாதென பிரதீப் உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவை மீறி பெற்றோருடன் பேசியதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மகள் கூறினார். அதன் பின்னர் ஒரு வருட காலம் இருவரது தொடர்பில் முறிவு ஏற்பட்ட நிலை காணப்பட்டது.
எனினும் மீண்டும் பிரதீப் பிரச்சினை ஏற்படுத்த ஆரம்பித்தார். இதனால் மகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யதார். கணவனின் கொடுமைகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போன போதிலும் அவர் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.
இந்நிலையிலேயே கொலை நடந்தது. 3 மாதங்களில் வைத்தியராகி வீட்டிற்கு வருவதற்கு அவர் எதிர்பார்ப்புடன் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்த மகள் இன்னும் 3 மாதங்களில் டொக்டர் காஞ்சனா என்ற பெயரில் வீட்டிற்கு வருவேன் என கூறி சென்றார். இறுதியில் இப்படி ஒரு கொடூரம் நடந்து விட்டது” என காஞ்சனாவின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இறந்த மருத்துவ மாணவியின் இறுதி சடங்கு இன்று சனிக்கிழமை (25) மதியம் 2.00 மணிக்கு களுபோவில பொது மயானத்தில் நடைபெறும்.