மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து மற்றும் கஞ்சா, சந்தேகத்தில் நள்ளிரவில் வீதியில் நடமாடியவர்கள் உட்பட 15 பேரை கைது செய்துள்ளதாக வாழசை்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாரின் விசேட வீதி சோனை நடவடிக்கை நேற்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீதி சோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவந்த 7 பேரையும் கஞ்சா போதைப் பொருளுடன் 4 பேரையும். நள்ளிரவில் வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 4 பேர் உட்பட 15 பேரை கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்