“அநாதைகள்” வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !!
“அநாதைகள்” வரிசையாக நில்லுங்கள்!
அல் மனாரில் நடந்த கேவலம் !!
ஒரு வகுப்பில் மட்டும்
20 மாணவிகளின் பெற்றோர் விவாகரத்து
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவில் நேற்று நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வே அது.
இதற்காக , தந்தை இல்லாத − மாணவிகளே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட இம் மாணவிகளை − ” அநாதைகள் எல்லோரும் வரிசையாக நில்லுங்கள் ” என்று அறிவிக்ககப்பட்டு குறித்த கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.
கல் நெஞ்சம் பிடித்த அயோக்கியத்தனமான − இந்த அயோக்கியத்தனமானோரின் அறிவிப்பால் குறித்த மாணவிகள் உட்பட அங்கு கடமை புரியும் ஆசிரிய , ஆசிரியைகள் அணைவருமே பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
ஆசிரியை ஒருவர் , மாணவிகளைப் பார்த்து ” ஏன் வரிசையாக நிற்கிறீர்கள் எனக் கேட்ட போது − மாணவி ஒருவர் ” டீச்சர் , அநாதைகளை வரிசையாக நிக்கட்டாம் என்டார் அதிபர் ” என்று கூறிய போது வாயடைத்து வெந்து போன அந்த ஆசிரியை ஓவென்று அழுது கொண்டு நிகழ்வை புறக்கனித்து − இந்த வரிசை ஏற்பாட்டாளர்களை திட்டித் தீர்த்துள்ளார்.
ஒரு மாணவி , இந்த கொப்பிகள் எனக்கு வேண்டாம் என்று கூறி ஓடி ஒழிந்துள்ளது. பின்னர் அந்த மாணவியை தேடிப்பார்த்த போது , தனது தந்தையின் ஞாபகம் வந்தவளாக ஒரு மூலையில் தேம்பித் தேம்பி அழுது நின்றுள்ளால்.
இந்த மாணவிகள் அணைவருமே 8, 9 , 10 மற்றும் 11 வயதுக்கு இடைப்பட்டவர்களாகும். இப் பிஞ்சு மனங்களில் ” நீங்களெல்லாம் அநாதைகள் ” என்று அவர்களை வேறுபடுத்திக் காட்ட எப்பிடி இவர்களுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.
ஏனைய மாணவ , மாணவிகளுக்கு முன்தபாக தம்மை மட்டும் ” அநாதைகள்” என்று கூறி வேறுபடுத்திய போது அப் பிஞ்சுக் குழந்தைகளின் மனம் எவ்வளவு வேதனையையும் வெட்கத்தையும் அடைந்திருக்கும்.
நாளை நீ மரணித்து உனது பிள்ளையை இவ்வாறு யாரும் அநாதை என்று வேறு படுத்தினால் எப்பிடி இருக்கும் என்பதை இப்போது நீ உயிரோடு இருக்கும் போது சிந்தித்துப் பாரு .!
உலகில் எங்கேயுமே நடக்காத ஒரு சம்பவம் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் , கல்லூரியின் வரலாற்றிலேயே முதல் தடவையாக நடைபெற்றுள்ளது என்றால் முழு உலகமுமே செருப்பால் அடிக்க வேண்டிய விடயமே இந்த சம்பவம்.
மாணவர்கள் என்றால் எல்லோரும் ஒன்றுதான். அதற்குள் அநாதை , எஞ்சினியர் மகள் , டொக்டர் மகள் என்றெல்லாம் பேதம் இல்லை., இருக்கவும் முடியாது.
அல் மனார் பெண்கள் பிரிவு அதிபரின் இந்த கேவலம் கெட்ட அழுகல் தனமான செயற்பாடு தொடர்பில் − மருதமுனையைச் சேர்ந்த கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்பதை ஆசிரிய , ஆசிரியைகள் அவதானம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
அல் மனார் பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சபை இந்த செயற்பாட்டுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
மனித உரிமை ஆணைக்குழு − இந்த விடயத்தில் எடுக்கப்போகும் தீர்வு என்ன?
இந்த சிறு ஆக்கம், இன்று மாலை மேண்மைதங்கிய ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஜனாதிபதியை இன்றும் நாளையும் சந்திக்கும் ஊடக நண்பர்கள் , அரசியல் பிரமுகர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பார்கள்.
கேவலம் − வெறும் 5 அப்பியாசக் கொப்பிகளுக்காக பிஞ்சு மனங்களை வேதனைப்படுத்தும் இவ்வாறான நாதாரிகளை புனிதமான ஆசிரியத் தொழிலை விட்டே தூரப்படுத்த வேண்டும்.
இது அவ்வாறே இருக்கத்தக்கதாக …இதே , அல் மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவிலுள்ள ஓரு வகுப்பில் மட்டும் விவாகரத்து பெற்றோரின் 20 பிள்ளைகள் கல்வி பயில்வது பெரும் ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது.
ஒரு வகுப்பில் மட்டுமே இந்தளவு தொகை என்றால் ஏனைய வகுப்புக்கள் , மருதமுனையிலுள்ள ஏனைய பாடசாலைகள் என ஒட்டு மொத்த மருதமுனையையும் எடுத்துக் கொண்டால் எவ்வளவு எண்ணிக்கை வரும் என்பதை நினைத்தே பார்க்க முடியாமல் உள்ளது.
ஏ.எச்எம்.பூமுதீன் ஊடகவியலாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.