இத்தாலியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து இத்தாலியின் Naples பகுதி மருத்துவமனை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
63 வயதான இலங்கை பெண் Naplesஇல் உள்ள Cotugno வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளதாக என சோதனையிடப்பட்டு வருகின்றது.
அவர் செவ்வாயன்று இலங்கையில் இருந்து இத்தாலிக்கு சென்றிருந்த நிலையில் இவ்வாறு நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பெண்ணிடம் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பரிசோதனை முடிவுகளுக்காக வைத்தியர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.