விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட எந்தவொரு நாடாளுன்ற உறுப்பினர்களோ அரசியல்வாதிகளோ செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்கு எந்தவொரு வெளிநபரும் வருவதில்லை என கொழும்பு மகசின் சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரனிகள் மாத்திரமே சிறைச்சாலைக்கு வந்து செல்வதற்காக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பொது மக்களேனும் இதுவரையில் அவரை பார்ப்பதற்கு சிறைச்சாலைக்கு வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் வெளிநபர்களை சந்திக்கும் பகுதிகளுக்கு ரஞ்சனை அழைத்து செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளில் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரசியல்வாதிகள் அவரை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.