இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் என மொத்த மாணவர்களில் 4.5% வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க சட்ட விதிகள் இருந்தாலும், குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே படிப்பதற்காக பதிவு செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையை சர்வதேச அறிவு மையமாக மாற்றுவதற்கான நோக்கத்துடன் உயர்கல்வி, தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்த திட்டம், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சதவீதத்திற்குள் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்க நடவடிக்கைகளைத் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளை வெளிநாட்டு நாணயத்திலிருந்து கட்டணம் வசூலிக்கும் அடிப்படையில் இலங்கை பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பதற்கும், இலங்கையி உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.