மலேசியாவை நோக்கி பயணித்த மரப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், படகில் பயணித்த 20 இந்தோனேசிய தொழிலாளர்கள் உயிருக்குப் போராடியுள்ளனர்.
இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து மலேசியா செல்ல முயன்ற போது, மலாக்கா ஜலசந்தியில் வைத்து இப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது உயிருக்கு போராடிய நிலையில் 10 பேர் மீட்கப்பட்டதாகவும், 10 பேரை காணவில்லை எனவும் இந்தோனேசியாவின் Pekanbaru மீட்பு ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஐசக் தெரிவித்தார்.
அந்தவகையில் காணாமல் போன 10 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 9 பேரை தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படகில் சென்ற இந்தோனேசியர்கள் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக மலேசியாவில் வேலைக்கு செல்ல முயன்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.