நடிகர் விஜய்யின் மகன் ஜான்சன் சஞ்சய் தனது படிப்பினை முடித்த பின்பு சினிமாவிற்குள் நுழையவிருப்பதாக, விஜய்யின் தீவிர ரசிகரும், மதுரை ரசிகர் மன்ற தலைவருமான மகேஷ் கூறியுள்ளார்.
சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் பெற்றோர், விஜய்யின் தீவிர ரசிகரான மகேஷ் வீட்டிற்குச் சென்றதும், அங்கு சமையலறையில் விஜய்யின் அம்மா சமையல் செய்த காட்சியும் வெளியானது.
இந்நிலையில் மகேஷ் கொடுத்த தகவலில், 1995ம் ஆண்டிலிருந்து விஜய்யின் ரசிகராக இருந்து வரும் எனது வீட்டிற்கு, விஜய்யின் தாய், மற்றும் தந்தை வந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் மதுரை வரும் போது நேரம் கிடைத்தால் தனது வீட்டிற்கும் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் தளபதி விஜய்யின் மகன் கனடாவில் திரைப்படம் சம்பந்தமான படிப்பினை இந்த வருடத்தில் முடிக்கவுள்ளதாகவும், இந்தியா வந்த பின்பு சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.