இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தேசிய மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.
ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த ´மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்´ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தாரகா பாலசூரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.