பிரதமர் நரேந்திர மோடியும் பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்சனரோவும் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்சனரோ 4 நாட்கள் பயணமாக தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி – பிரேசில் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கு இடையே இணையதளப் பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நாட்டின் 71ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.