அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் மற்றும் அவரது மகள் கியானா ஆகியோர் கலிபோர்னியாவின் கலாபாசஸில் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
41 வயதான பிரையன்ட் மற்றும் 13 வயதான மகள் பயணித்த தனியார் ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
விபத்தில் யாரும் தப்பவில்லை என்று லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் கூறினார்.
ஐந்து முறை NBA சம்பியனான பிரையன்ட், கூடைப்பந்து வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
அவரது திடீர் மரணத்தால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல பிரபலங்கள் மற்றும் பிற விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
துரதிர்ஷ்டவசமான மரணத்தால் கோபி பிரையன்ட் மற்றும் அவரது 13 வயது மகள் கியானா காலமானார்கள் என்று என்.பி.ஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.