மட்டக்களப்பு – வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.
வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர நிலையத்திற்கு இடைப்பட்ட புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாட்டு கேட்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த ஜெய்கப்ஜோன் ஜோன்சன் (வயது 19) என்ற இளைஞனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.