“இயற்கை”, “ஈ”, “பேராண்மை”, “புறம்போக்கு” போன்று சமூக அக்கறைக்கொண்ட படங்களை இயக்கியவர் SP ஜனநாதன். தற்போது அவர் நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாகும் லாபம் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, கலையரசன், மற்றும் சாய் தன்ஷிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது வந்த தகவலின் படி இந்த படத்தில் வரும் ஒரு ரொமான்டிக் பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த செய்தியை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்கும் திரைப்படம் ‘லாபம்’ ஆகும்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்னும் படத்தில் நடித்துவருகிறார். அதற்குப்பின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “துக்லக் தர்பார்” ஆகியபடங்களில் நடிக்கவுள்ளார்.
Roped in @shrutihaasan to render a melodious romantic track for #Laabam Produced by @7CsPvtPte N @vsp_productions under SP Jananathan sir’s direction! Starring @VijaySethuOffl n @shrutihaasan in the lead! Lyric by @YugabhaarathiYb Can’t wait to share the trk with you! Praise God! pic.twitter.com/8p7zuTg8Uv
— D.IMMAN (@immancomposer) January 26, 2020



















