விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வந்தவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பின்னர் அவருக்கு இங்க போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கன்னட திரையுலகம் பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால், வீட்டிலேயே கிடந்தார். பிறகு தமிழில் அண்ணி வேடம் அம்மா வேடம் என நடித்தார்.
10 வருடங்களுக்கு முன்பு இவர் சீமான் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், 3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது அப்படியே மறைந்து போய் விட்டது. இந்தநிலையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. மதுரையில் அவருடன் விஜயலட்சுமி 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளார். 3 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இருவரும் Cake ஊட்டி குத்களிதுள்ளர்கள் . எல்லாம் முடிந்த பின், தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி. சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், “நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார்”. என்று வழக்கம் போல் ஏமாற்றிய நபர் போல் பேசினார்.
தற்போது கூட விஜயலட்சுமி மிகவும் வறுமையில் இருக்கிறார், ரஜினிதான் அவரை பார்த்து ஒரு தொகையை கொடுத்து உதவியுள்ளார்.