செய்திவாசிப்பாளராக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, பின் சின்னத்திரை நடிகை, தொகுப்பாளினி என தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்டு வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வருபவர், நடிகை பிரியாபவானி ஷங்கர்.
இவர் சமீபத்தில் நடித்த அணைத்து படங்களும் தொடர்ந்து, ஹிட் அடித்து கொண்டே வருவதால், அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் ‘இந்தியன்’ 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், ராஜ்வேல் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தாலும், இதனை ஒரு முறை கூட பிரியாபவானி வெளிப்படையாக கூறியதே இல்லை. ஆனால் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் அதிகம் வட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போது பிறந்தநாள் கொண்டாடும் ராஜ்வேலுக்காக அழகிய காதல் பொங்கும் வரிகளால்… பிரியாபவானி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.