வெப் சீரிஸ், ஆன் லைன் படங்கள், அனைவரது கையில் உள்ள செல்போன்களிலும் 24X7 இன்டர்நெட் கனெக்ஷன் என்று எல்லாம் இருந்தும் 90ஸ் கிட்ஸ் தங்களது பேவரட் சீரியலான சித்தி-2 வை காண எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரையிலும் கால் பாதித்து, அசுர வளர்ச்சி அடையாலம் என்பதை நிரூபித்தவர் ராதிகா சரத்குமார்.
கண்ணின் மணி கண்ணின் மணி என தொடங்கும் பாடலும், சித்தி என ஒலிக்கும் சிறுமியின் செல்ல சினுங்களும் அனைவரது இல்லத்தையும் ஆக்கிரமித்தது. 1999 முதல் 2001ம் ஆண்டு வரை ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொலைக்காட்சி முன்பு காட்டி போட்டு வைத்தது.
இந்நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு சித்தி – 2 தொடர் இன்று இரவு 9 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ராதிகாவின் கணவராக பொன்வண்ணன் நடிக்கிறார். மீண்டும் அதே கண்ணின் மணி, கண்ணின் மணி பாடலுடன் இல்லத்தரசிகளை குஷிப்படுத்த வருகிறாள் சித்தி. முதல் நாள் என்பதால் இன்று மட்டும் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.
From today @SunTV at 9pm. Today is a mega episode of one hour 9- 10pm. Hard work never fails🙏🙏🙏wishes to the team. pic.twitter.com/zXWZkXuJWS
— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2020
சித்தி தொடர் ராதிகா, சிவக்குமார் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பு, பாடல், கதையம்சம், கேரக்டர்கள், ஒளிப்பதிவு என பல கோணங்களில் சிறப்பானதாக பார்க்கப்பட்டது. அதனால் தான் அந்த காலத்தில் சித்தி சீரியலுக்கு ஆண்களும் ரசிகர்களாக இருந்தனர். சித்தி சீரியல் பாடல் தொடங்கியதில் இருந்து எழுத்து சி ஜே பாஸ்கர் என்று முடிவடைவது வரை சேனலை மாற்றாமல் பார்க்கும் போக்கு இருந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சித்தி 2 அவ்வளவாக முக்கியத்துவம் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




















