ஈரானில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையிலிருந்து சறுக்கி விமான நிலைய வேலியை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஈரானின் தென்மேற்கில் உள்ள மஹ்ஷாஹர் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறகும் போது இவ்விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
விமானத்தில் 130 பயணிகள் பயணித்ததாகவும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம் நெடுஞ்சாலையில் குறுக்கே புகுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பயணிகளை பத்திரமாக மீட்டு, விமானத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.\
Dramatic footage of a passenger plane belonging to #Iran’s Caspian airline landing in the middle of the street in Mahshahr (same city that many were killed in Nov. protest) this happened in the last hour. Witness who got the footage didn’t know if there were any casualties. pic.twitter.com/oa6ghmT8bu
— Bahman Kalbasi (@BahmanKalbasi) January 27, 2020
சமீபத்தில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானம் நடுவானில் ஈரான் படையால் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 பேர் கொல்லப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
Eye witness sending me these images says all passengers got off the plane. #Iran #Mahshahr #CaspianAirline pic.twitter.com/1jT608cOOp
— Bahman Kalbasi (@BahmanKalbasi) January 27, 2020