கம்பஹாவில் வர்த்தகர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
தடகமுவ பிரதேச உணவகத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வர்த்தகர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்துள்ளதாக வேயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கலகேடிஹேன குருந்துவத்தை பிரதேச வர்த்தகர் மற்றும் அவருடன் வந்த நபரே எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வர்த்தகர் நவீன ரக துப்பாக்கி ஒன்றில் வானத்தை நோக்கி 8 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தவுடன் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ததுடன், நவீன ரக துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.