சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் ஊடுருவதை தடுப்பதற்கான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுகை காரணமாக பாதிக்கப்பட்ட 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 56 பேராக காணப்பட்ட மரணமடைந்தோரின் எண்ணிக்கை இன்று 80 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.