இப் படுகொலை பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பேரினவாதத்தால் அரங்கேற்றப்பட்ட இப் படுகொலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.
அத்துடன் சர்வதேச அரங்கிலும் இப் படுகொலையின் கொடூரம் வெளிக்கொண்டுவரப்பட்டது.
எதிர்பாராத பொதுமக்கள் மரணப் பீதியில் நாலாபுறமும் ஓட பண்ணையினை சுற்றி நின்ற படையினர் உயிர் தப்ப ஓடியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்க ஆண் பெண் இளைஞர்கள் வேறுபாடின்றி அப்பாவி பொது மக்கள் 100ற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன்போது ஒரே குடும்பத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் இப் படுகொலைக்குள்ளாக்கப்பட்டவார்கள் அனைவரும் உறவினர்களாகவே காணப்பட்டனர். படையினரின் வேரிச்செயலால் ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலமாகக் காணப்பட்டது.
பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருந்த இவ் இறால் பண்ணையில் பண்ணையை அண்மித்த கிராமங்களில் உள்ள வறிய மக்கள் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என பெருமளவிலானோர் வேலை செய்து வந்தனர்.
வழமைக்கு மாறாக இறால்ப் பண்ணையைச் சுற்றி நாலா புறமும் படையினர் சூழ்ந்த நிலையில் கொக்கட்டிச்சோலை மற்றும் அயல் கிராமங்களில் உள்ள படை முகாங்களில் இருந்தும் படையினர் இறால் பண்ணையினை நோக்கிச் சூழ்ந்தனர்.
இதன்போது ஆவேசத்துடன் உள்ளே நுளைந்த படையினர் கண் மூடித்தனமாக பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கி வேட்டக்களைத் தீர்த்தனர்
பேரினவாதத்தினால் க்ட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகளில் ஆரம்பத்தில் இடம்பெற்ற படுகொலையாக கொக்கட்டிச்சோலைப் படுகொலை வரலாற்றில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.