மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது நிர்கதிக்குள்ளான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கின் அனலைத்தீவு கடல்பகுதியில் இழுவைப்படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த படகு இயந்திர பழுது காரணமாகவே அங்கு தரித்திருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த இழுவைப்படகில் இருந்து கடற்றொழிலாளர்களை வேறு ஒரு இந்திய இழுவைப்படகில் அனுப்பிவைக்க இலங்கை கடற்படையினர் உதவிசெய்துள்ளனர்.