பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் உயிரிழந்த குறித்த நபர் சீனப்பிரஜையாக இருந்தாலும் நீண்டகாலமாக பதுளையிலேயே வசித்து வந்துள்ளார்.
அத்துடன் அங்குள்ள பெண்ணையே அவர் திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே, குறித்த சீனப்பிரஜையின் உயிரிழப்பு தொடர்பில் மக்கள் வீண் பதற்றம் அடையவேண்டிய தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.