எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் முன்னேற்றத்திற்குத் தடையாக ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவும், மறைமுகமாகவும் கைங்கரியங்களை மேற்கொண்டுவருகின்றார்.
இந்நிலையில் இன்னும் சிறுதுகாலம் தான் அரசியலில் நின்று பிடிப்பதற்கு இடமளிக்குமாறும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசியப்பட்டியலிலிருந்து குறைந்தளவு தனக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறும் சஜித் பிரேமதாசவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுப் பிற்பகல் கபீர் ஹாஷிமை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி சஜித் பிரேமதாசவிடம் இது தொடர்பில் பேசுமாறு அவரிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கபீர் ஹாஷிமைச் சந்தித்து உரையாடியபோது, ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு காதில் பூ சுத்துவது போல ஒரு விடயத்தையும் கூறுமாறு பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித்திற்கு வழங்க முடியும் எனவும், அந்தக் கூட்டணியின் செயலாளர் பதவியைக்கூட சஜித் ஆதரவு அணியில் ஒருவருக்கு வழங்க முடியும் எனவும் சஜித்திடம் கூறுமாறு ரணில் பணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.