தேவர்களும் அசுரர்களும் பாம்பை இரு பக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விசத்தைக் கக்கியது. உண்மையில் அது விசமில்லை கொரோனா வைரஸ். அந்த வைரசை சிவன் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது.
இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம்.
அதை அறிந்துதான் மக்களைக் காக்க சிவன் பாம்பை கழுத்திலே அணிந்து தெய்வ அந்தஸ்துக் கொடுத்து பாம்பை உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம்.
உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா?
சீனாவில் நாகப்பாம்பு சாப்பிட்டவரிலிருந்துதான் இந்த வைரசே பரவியது. இதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.
“சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்”
இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்றுசேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு ( இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) சிதை கொள்வாள். அதாவது இறப்பார்கள்.
கொரோனா வைரஸ் என்ற பெயரே துரோணர், குரோனர் என்பதிலிருந்துதான் வந்ததென்று எத்தனை பேருக்குத் தெரியும்?
இப்படியான அரிய கண்டுபிடிப்பை வேற ஒரு மதத்தில் பிறந்து கண்டு பிடித்திருந்தால் நானும் இன்னேரம் பெரிய ஆளாய் ஆகியிருப்பேன். என்னையொரு மத அறிஞராகவே அறிவித்து வட்சப் வைபர் என் எல்லோரும் பகிர்ந்து தள்ளியிருப்பார்கள்.
நம்மட மதத்தில யாரு இப்படியான அறிவியல் கண்டுபிடிப்பை யெல்லாம் கண்டுகொள்கிறார்கள். எல்லாரும் நித்தியானந்தரைத்தான் வணங்குகிறார்கள். இப்படியிருந்தா எப்படி இந்துமதம் வளரும்?