தொப்பை இன்று இளைஞர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது. தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் என்னென்னவோ செய்கின்றனர்.
நீங்கள் நினைத்து கவலைப்படும் அளவு தொப்பை பெரிய பிரச்சினையே இல்லை. சில பழக்கங்களால் அவற்றை மாற்றி கொள்ள முடியும்.
காலை எழுந்த உடன் தினமும் 30 நிமிடம் செலவு செய்தால் போதும். சில மணி நேரத்தில் நல்ல மாற்றத்தினை உணர முடியும்.
வெந்தயத் தண்ணீர்
வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். அப்படி செய்தால் தொப்பை மாயமாக மறைந்து விடும். வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.
இஞ்சிச் சாறு
இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
வெள்ளைப்பூசணி சாறு
வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.