யாழ்ப்பாணம்– வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் அண்மையில் இராணுவ வீரரை நபர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 இளைஞா்களும்இன்று பிணையில்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 8 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினரை நாகர்கோவில் பகுதிக்கு சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்தான் இந்த வழக்கில் முன்னிலையாவதாகஉறுதியளித்திருந்தாா்.
இதற்கமைய இன்று காலை பருத்தித்துறை நீதிமன்றில்குறித்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், 8 இளைஞா்களும் தலா 5 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலைசெய்யப்பட்டனா்.