கையளித்தவர்கள் எங்கே என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிட்டத்தட்ட 1000 நாட்களையும் தாண்டி தொடர்ந்து வீதியிலே போராடிக்கொண்டிருக்க வேண்டிய பரிதாப நிலை இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என முன்னாள் வடமகாண சபை உறுப்பினரும் ரெலோவின் மூத்த உறுப்பினரும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் பொறுப்பற்ற விதத்திலே சொல்லுகிறது காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்று. எப்படி கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? ஏன் கொல்லப்பட்டார்கள் என இந்த அரசாங்கம் நிச்சயமாக, பகிரங்கமாக சொல்ல வேண்டும்.
அதை சொல்லாமல் யுத்தத்திலே இறந்து விட்டார்கள். யுத்தத்திலே இறந்து விட்டார்கள் என வெறுமனே ஒரு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு வருகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.