கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
அதிகளவிலான வரிசுமை காணப்படுவதாக ஆதனவரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில், வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரகுமார் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
குறித்த வாக்குவாதத்தின் போது கரைச்சி பிரதேச சபை அமர்வில் ஈ.பி.டி.பியின் சந்திரகுமார் அணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதேச உறுப்பினர் ஜீவராசாவை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
https://www.facebook.com/watch/?v=1181792345357823
மேலும் இதன்போது, தடுப்பு காவலுக்கு போகாத முன்னாள் போராளி பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுமாரை தடுப்பு காவலில் அனுப்புவேன் பிரதேச சபையின் உறுப்பினர் மோகன்ராஜ் சபதம் எடுத்துள்ளார்.