தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.
மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகியது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய சகப்போட்டியாளரான ஆரவ்வை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த சென்ற வருடத்தில் ஓவியா நடிப்பில் வெளியான 90 ml என்ற படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது, மது அடிப்பது, கஞ்சா அடிப்பது போன்றும் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல், சிறிய வேடங்களில் தோன்றி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிடுவது வழக்கம்.
https://twitter.com/OviyaaSweetz/status/1222465961678135296https
//twitter.com/OviyaaSweetz/status/1222465961678135296
No worries, we are here for you always ❤️ Everything will be alright ☺️
— Vignesh (@Vijay_Thalaiva) January 29, 2020
இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் ” வாழ்க்கைக்கு அர்த்தமில்லை ” என்று பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ட்விட்டர் நெட்டிசன் ஒருவர், ” கவலை வேண்டாம்.. நாங்கள் அன்போடு எப்போதும் இருக்கிறோம், எல்லாம் சரியாகிவிடும் ” என்று பதில் தெரிவித்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன ஓவியா அந்த நபருக்கு ” அடப்பாவிங்களா.. இது தத்துவம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார்.