பத்தனை – ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் 3ஆம் திகதிவரை கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்றையதினம் சுமார் 100 பேரும், இன்றையதினம் சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.