நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர சந்திப்பில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர்,
தமிழ் மொழியில் மாத்திரம் அல்ல வேறு எந்த மொழியில் வேண்டும் என்றாலும் தேசிய கீதம் பாட முடியும். எனினும் தேசிய சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும்.
வட பகுதியில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.