பிரபல பாடகியும் நடிகையும் அறிவிப்பாளருமான சஞ்ஜீவனி வீரசிங்க இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்ஜீவனி வீரசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
பெண்களுக்கு இலவசமாக மாதவிடாய் நப்கீன்களை வழங்குவதாக சஜித் பிரேமதாச வழங்கிய வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த இவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார்.