நாட்டின் முன்னேற்றத்திற்காக கட்சி பேதங்களை புறந்தள்ளி விட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டால் நாடு தொடர்ந்தும் முன்நோக்கி செல்லும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
நாங்கள் பாரிய பங்கு வேலைகளை செய்துள்ளோம். நாங்கள் எந்த வேலைகளையும் செய்யவில்லை என்று எவரும் கூற முடியாது. கடந்த சில ஆண்டுகளில் பொலன்நறுவையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் தேர்தல் நடக்கும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் பிரச்சினை முடிவுக்கு வராது. அதிகரித்து வரும் சனத் தொகை பெருக்கம், இயற்கை சவால்களால் பிரச்சினைகளை ஏற்படும்.
இவற்றுடன் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிய வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.