சிரியாவில் அந்நாட்டு அரசிற்கு ஆதரவு அளிக்கும் ரஷ்ய படை, மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக சிரியாவில் போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் நகரை கைப்பற்றியதாக சிரிய அரசு அறிவித்துள்ளது. எனினும், கிளர்ச்சி படைகளை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தோடு சிரிய அரசும், அதற்கு ஆதரவாக ரஷ்யாவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இட்லிப் நகரில் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய நடத்திய வான்வெளி தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை அரசாங்க நட்பு நாடான ரஷ்யா விமானப்படை மருத்துவமனை அருகில் தாக்குதல் நடத்தியது.
இதில், 5 பெண்கள் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.