ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்றில் பணித்த பெண் ஒருவர், நடுவானில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்ஃபெரோபோலில் இருந்து மாஸ்கோ பயணித்த ரஷ்யாவின் எஸ்-7 ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
விமானம் சிம்ஃபெரோபோலில் இருந்து மாஸ்கோ பறந்துக்கொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவர் விமானத்தின் இடைவெளியில் திடீரென எழுந்து நின்று தன்னிடம் வெடிக்கும் சாதனம் இருப்பதாகக் கூறினார்.
இதைகேட்டு பயணிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். உடனடியாக விமானத்தின் தலைமை விமானி சம்பவம் குறித்து மாஸ்கோவிற்கு அருகிலுள்ள டொமோடெடோவோ விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விமானம் அவசரமான டொமோடெடோவோ விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், தனி நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு மற்றும் விமான நிலைய அவசர சேவை அதிகாரிகளை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் வெடிக்கும் சாதனம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.