தான் பசியால் சாவேனா அல்லது கொரோனா வைரஸ் தொற்றால் சாவேனா என்று தெரியவில்லை என்று பயந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார் சீனாவின் வுஹானில் சிக்கியிருக்கும் தாய்லாந்து மாணவி ஒருவர்.
Pasnicha Krutdamrongchai, வுஹான் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ஒரு மாணவி.
பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், தாய்லாந்து தன் நாட்டு மக்களை மீட்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் Pasnicha.
திடீரென வுஹான் மூடப்பட்டதால் தங்களிடம் போதுமான உணவும் இல்லை, தாங்கள் உணவை வாங்கி சேமித்து வைக்கவும் இல்லை என்கிறார் அவர்.
வெளியே போய் உணவு வாங்கவும் முடியாது, வெளியே போனாலும் பல்பொருள் அங்காடிகளில் உணவும் இல்லை என்று கூறும் Pasnicha, பட்டினி கிடந்தே செத்துவிடுவோமா என்று பயமாக இருக்கிறது என்கிறார்.
தன்னுடன் இருக்கும் மற்ற நாட்டு மாணவிகளை அவர்களது நாடு மீட்டுச் செல்லும் நிலையில், தாங்கள் மட்டும் வுஹானில் சிக்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறார் அவர். எப்படியாவது தங்களை மீட்டுச்செல்லுமாறு தாய்லாந்து அரசிடம் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார் Pasnicha.