கொரோனா வைரஸின் கோரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சீனாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கை சீனாவால் தடுக்கப்பட்டநிலையில், ராணுவத்தை அனுப்பி பிரித்தானியர்களை மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அமெரிக்காவும் ஜப்பானும் தங்கள் மக்களை மீட்டுக்கொண்டு விட்ட நிலையில், பிரித்தானியாவால் மட்டும் அது ஏன் சாத்தியமாகவில்லை என மக்கள் கொந்தளித்துப்போயுள்ளனர்.
எனவே அடுத்தகட்ட நடவடிகையாக, சீனாவுக்கு விமானப்படை விமானத்தை அனுப்பி பிரித்தானியர்களை மீட்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் அதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீன மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு விமானத்தில் இடமில்லை.
குறைந்தபட்ச பொருட்களை மட்டுமே உடன் எடுத்து வர அனுமதி. யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்படுவார்கள்.
பிரித்தானியர்களை மீட்பதற்காக சீனாவுக்கு அனுப்பப்படவுள்ள விமானப்படை விமானத்தில், ராணுவ வீரர்களே விமான ஊழியர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் ராணுவ தளம் ஒன்றிற்கு கொண்டுவரப்படும் வரையில், ராணுவ மருத்துவர்கள் பயணிகளை கவனித்துக்கொள்வார்கள் என்றும் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
Oxfordshireஇலுள்ள விமானப்படை விமானதளத்துக்கு பயணிகள் கொண்டுசெல்லப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், தாங்கள் எப்போது மீட்கப்படுவோம், எங்கிருந்து விமானத்தில் ஏறுவோம் என்பது முதலான எந்த தகவலும் தங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என சீனாவிலிருக்கும் பிரித்தானியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.