டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த நான்கு பேருக்கு நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
தண்டனையில் இருந்து தப்புவதற்காக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்களை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர்.
அக்சய்குமார் என்பவனின் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது. ஏற்கனவே வினய் குமார், முகேஷ்சிங் ஆகிய குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பவன்குப்தா மட்டும் இன்னும் சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை.
இவர்கள் நால்வருக்கும் நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக, திகார் சிறையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதோடு, அதற்கான ஒத்திகை இன்று நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.