சீனர்களை தண்டிக்கவே சர்வவல்லமையுள்ள கடவுளால் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளார் முஸ்லிம் மதகுருவான இலியாஸ் ஷராபுதீன். உய்குர் முஸ்லிம்களிற்கு சீனா இழைக்கும் மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறையினால் கோபமடைந்தே, கடவுள் இந்த வைரஸை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய மதகுரு இலியாஸ் ஷராபுதீன் மேலும் குறிப்பிடுகையில்,
“அவர்கள் முஸ்லிம்களை எவ்வாறு அச்சுறுத்தினார்கள், 20 மில்லியன் உயிர்களை அழிக்க முயன்றார்கள் என்பதை நினைவில் கொள்க. முஸ்லிம்கள் குடிக்கவும், மசூதிகளை அழிக்கவும், புனித நூல்களை எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். தங்களை யாரும் சவால் செய்ய முடியாது என்று சீனர்கள் நினைத்தார்கள். ஆனால், உலகின் மிக சக்திவாய்ந்த அல்லாஹ் இப்போது அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளார். ”
சீனாவில் சிறுபான்மை முஸ்லிம் சமூகமான உய்குர்களை சீன அரசாங்கம் நீண்ட காலமாக ஒடுக்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் உய்குர் ஆண்கள் நீண்ட தாடி வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை.
“கவனமாக இரு! மிகவும் தாமதமாகிவிடும் முன் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவரை மட்டுமே வணங்குங்கள். மக்கள் மசூதிகளுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள், முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாறுவதைத் தடுக்க வேண்டாம். இல்லையெனில் நீங்களும் சீனர்களும் அழிந்து போவீர்கள்“. என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் மற்றும் அப்பாவி முஸ்லிம்களைத் துன்புறுத்துபவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்துக்கள் பயங்கரவாதிகள், முஸ்லிம்கள் கடவுளின் குழந்தைகள் என்ற அவரது முந்தைய அறிக்கை பெரும் சர்ச்சையைத் தூண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.