தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் அவர்கள் நேற்று முதல் தங்கியிருந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.