ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த பனமேனியக் கொடியிடப்பட்ட டேங்கரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், இந்தியர்கள் இருவர் பலியானதோடு, பலர் மாயமாகியிருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
புதன்கிழமை மாலை ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரையில் இருந்து 21 மைல் தொலைவில் உள்ள பனமேனியக் கொடியிடப்பட்ட டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டதாக, நில மற்றும் கடல் போக்குவரத்துக்கான மத்திய ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த நேரத்தில் 12 பணியாளர்கள் உட்பட டேங்கரில் சுமார் 55 பேர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தில் இரண்டு இந்தியர்கள் இறந்துவிட்டதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 10 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.