திருகோணமலை கண்டி பிரதான வீதி, தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததில் வாகன சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்
கந்தசாமி ஜெகநாதன் திருகோணமலையை மிகுந்தபுற முகவரியை வசிக்கும் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனரக வாகனம் தீப்பற்றி எரிந்தற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.