தமிழ் சினிமாவினால் கிடைக்காத பிரபலத்தை நடிகை ஓவியா, உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் அடைந்துவிட்டார். இவருடைய ஒளிவு மறைவற்ற பேச்சாலும் வெகுளித்தனத்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு ஆர்மியையே வைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.
Life has no meaning..
— Oviyaa (@OviyaaSweetz) January 29, 2020
இவர் இறுதியாக இளம்பெண்களில் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்ட ஒரு காமெடி படமான “90ML” படத்தில் இவர் நடித்தார். இந்த படம் நினைத்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. இந்த படத்திற்குப் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நேற்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ” வாழ்க்கை அர்த்தமற்றது” என்ற வார்த்தைகளை பகிர்ந்தார். அதைக்கண்டதும் அவருடைய ரசிகர்கள் “என்ன ஆச்சு…? எதை இருந்தாலும் பாத்துக்கலாம்” என்று கமெண்ட் அளித்தனர்.
அதற்கு அவர் ” சோகமென்ற உணர்ச்சித்தரும் பயம் பெரும்பாலும் மகிழ்ச்சியின் உயர் உயரங்களை அனுபவிக்கும் ஒரு நபரின் திறனை கட்டுப்படுத்துகிறது. பலர் தங்கள் முழு வாழ்க்கையையும் நடுத்தர மண்டலத்தில் வாழ்கின்றனர். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை அல்லது மிகுந்த சோகத்தை அனுபவிப்பதில்லை. அப்படிப்பட்ட தோழர்களை மாற்றுவதற்கான நேரம்!” என்று பதிலளித்துள்ளார்.
Oviya,if we face continues obstacles and unwanted happenings in our life,it seems to be that “Life has no meaning” but with our confidence and strong mind settings we should overcome all the negative happenings and make our life positive as ” Life has a meaning” Gohead Oviya.
— Johnponraj (@Johnponraj2) January 29, 2020