புதிய அரசியல் கூட்டணிக்கான அறிவிப்பை அடுத்தவாரத்தில் வெளியிட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத் தெரிவித்தார்.
கூட்டணியின் சின்னம் அன்னப்பட்சி அல்ல என்பதை உறுதிசெய்த அவர், சின்னம் மற்றும் பெயர் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடுத்தவாரத்தில் அறிவிப்போம் என்றும் கூறினார்.