கொரோனா வைரஸால் கேரளாவில் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் அதே மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிர்கொல்லி வைரஸ் இலங்கை, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்கனவே மாணவி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இருந்து நாடு திரும்பிய, கேரளாவைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புள்ள நபரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.