சீனாவை தொடர்ந்து முதன் முதலில் கொரோனோ வைரஸ்லால் வெளிநாட்டில் நபரு ஒருவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனோ என்னும் கொடிய உயிர் கொல்லி வைரஸ், சீனாவி, மட்டுமின்றி உலகின் முக்கிய நாடுகளான 22 நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 250-க்கும் மேற்பட்டோரும், உலகம் முழுவதிலும் 11,000 பேருக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வெளிநாடுகளில் கொரோனோ வைரஸால் எந்த ஒரு இறப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸில் கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு பின் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் நபர் இவர் தான் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இறந்த நபருக்கு 44 வயது இருக்கும்எனவும், அவர் சமீபத்தில் சீனாவின் வுஹான் நகரத்திற்கு சென்று திரும்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் இன்னொரு 38 வயது பெண்ணிற்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.