சீனாவில் விலங்குகளிடமிருந்து கொரோனோ வைரஸ் பரவுவதாக வதந்தி கிளம்பியதை அடுத்து, அங்கிருக்கும் மக்கள் பலர் தங்கள் செல்லப்பிராணிகளை தூக்கி எறிந்து கொன்ற புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
கொரோனோ என்னும் கொடிய வைரஸ் இப்போது சீன மக்களை பெரிதும் பயமுறுத்தி வருகிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சீன அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் விலகுங்களிடமிருந்து கொரோனோ வைரஸ் பரவுவதாக ஒரு வதந்தி கிளம்பியதால், அங்கிருக்கும் மக்கள் பலர் தங்கள் வீட்டில் ஆசையாக வளர்த்த பூனை, நாய் போன்ற விலங்குகளை தெருவில் வீசியுள்ளனர்.
இதில் விலங்குகள் இரத்தம் வழிந்த நிலையில் தெருவில் இறந்து கிடக்கின்றன. Hebei மாகாணத்தின் Tianjin-வில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடும்பத்தினர் ஒருவர் தாங்கள் ஆசையாக வளர்த்த பூனை குட்டியை அங்கிருந்து தெருவில் வீசி எறிந்துள்ளனர்.
அதே போன்று Shanghai-யில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே 5 பூனைகள் பரிதாப நிலையில் செத்து கிடக்கின்றன. அந்த விலங்குகளை எல்லாம் பார்த்தால், மிகவும் சுத்தமாக அழகாக இருக்கின்றன. இப்படி பத்திரமாக பார்த்து வந்த செல்ல குட்டிகளை அவர்கள் பரவிய வதந்தி காரணமாக இப்படி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இது ஒரு வதந்தி எனவும், இதுவரை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான பூனைகளுக்கோ, நாய்களுக்கோ கொரோனோ வைரஸ் பரவியதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.