தான்சானியாவில் தேவாலய பிராத்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெரிசலில் சிக்கி 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிமஞ்சாரோ மலைச் சரிவுகளுக்கு அருகிலுள்ள மோஷி நகரில் சனிக்கிழமை மாலை தேவாலய அரங்கத்தில் சிறப்பு பிராத்தனை நடந்துள்ளது.
இதன்போது ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெயை பெற நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்ற போது நெரிசல் ஏற்பட்டுள்ளது. உயரிழந்த 20 பேர் ஐந்து பேர் குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் கூறினார்.
தேவாலய பிராத்தனையின் போது வழங்கப்படும் ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய், வழிபாட்டாளர்களின் வாழ்க்கையை செழிப்பாக்கும் மற்றும் அவர்களின் நோயை குணப்படுத்தும் என பாஸ்டர் போனிஃபேஸ் மவம்போசா உறுதியளித்ததின் மூலம் பெரும் கூட்டத்தை ஈர்த்துள்ளார்.
இந்த சம்பவம் இரவில் நடந்தது, மேலும் ஏராளமானோர் இருந்தனர், எனவே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் இன்னும் நிலைமையை மதிப்பிட்டு வருகிறோம் என மோஷி மாவட்ட ஆணையர் கிப்பி வாரியோபா கூறினார்.